Panchapuranam in shaivam (பஞ்சபுராணம்)
திருச்சிற்றம்பலம்
பஞ்சபுராணம் என்றால் என்ன ?
சைவ சமயத்திலே பஞ்சபுராணம் என்றால் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகிய நூல்களில் இருந்து பாடப்பெரும் பாடல்களே.
(எடு-க)
(1) தேவாரம்- இரண்டாம் திருமுறை (048 திருவெண்காடு)
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
(2) திருவாசகம் (பிடித்த பத்து 9வது பாட்டு )
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
(3) கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் 2ஆவது பாடல் ( திருவிசைப்பா)
நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே
(4) சேந்தனார் அருளிய கோயில் - மன்னுக திருப்பல்லாண்டு (2ஆவது பாடல்)
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
(5) திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - (தில்லைவாழ் அந்தணர் புராணம்)
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
இதை சர்குருநாத தேசிகர் அவர்கள் Shaivam.org என்கிற வலைப்பக்கத்தில் ஒவ்வொரு நாட்களுக்குமாக பாடி தந்திருக்கிறார். இதனை அனைவரும் கேட்டு & பாராயணம் செய்யுமாறு சீரம்தாழ்த்தி வேண்டுகிறேன்
சிவாயநம

Comments
Post a Comment