பஞ்ச பூதங்களும் அவற்றின் அதி தெய்வங்களும்
உ
சிவமயம்
சிவமயம்
பஞ்ச பூதங்களும் அவற்றின் அதி தெய்வங்களும்
பஞ்ச பூதங்கள் என்பவை
1) மண்
2) நீர்
3) தீ
4) காற்று
5) ஆகாயம்
பஞ்சபூதங்களின் அதி தெய்வங்கள் யார்? என்றும் அவற்றின் தொழில் யாது? என திருவதிகை மணவாசகம்கடந்தர் தன்னுடைய குருவாகிய மெய்கண்ட தேவரிடம் கேட்கிறார், இதை பற்றின சான்று உண்மை விளக்கம் என்னும் நான்காம் திருநெறியிலே இதற்கான குறிப்பு இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இரண்டாவது பாடலின் வினாவிற்கான ஒரு பகுதியின் பதிலே ஆகும், தேசிகர் தம்முடைய மாணாக்கருக்கு 36 தத்துவங்களை கீழிருந்து மேல்நோக்கி விளக்கும் பாங்கும் இறைவர் அருளின் மாண்பும் நன்கு புலப்படும்
பாடல்:7
பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment