ஒரே நாளில் மூன்று குருஸ்தலங்கள்.....

சிவமயம் 

ஒரே நாளில் மூன்று குருஸ்தலங்கள்.....

சிவனின் அருளால் முதல் நாளே (23/05/2018) நான் சென்னையில்  இருந்து 
கும்பகோணம் பேருந்தில் ஏறி விடியற்காலை 4.45 மணிக்கு செல்ல வேண்டிய பேருந்து 5.45 மணிக்கு சென்றது.

முதல் வேலையாக நான் ஆலங்குடி வண்டியை தேடி விறைந்தேன், அனால் அந்த பேருந்து மன்னார்குடி பயணிகளை ஏற்றிய பிறகு தான் ஆலங்குடி பக்தர்களை ஏற்றுவார்களாம் சிறிது நேர காத்திருப்புக்கு பின் என்னை அந்த பேருந்தில் ஏற  சொன்னார்கள், அங்கே சென்றடைய மணி 6.20 ஆயிற்று, முடிவு செய்துவிட்டேன் மூலவருக்கு அபிஷேகம் செய்ய இயலாது என்று (6.00 மணிக்கே மூலவருக்கு அபிஷேகம் முடிந்துவிடும் மேலும் நான் சென்றது 24/05/2018 வியாழக்கிழமை அபிஷேகம் செய்ய வேண்டிதான்).


விரைந்தேன் அபத்ச்யகேஸ்வரர் கோவிலுக்கு, குளித்து இதர கடமைகளை முடித்து உள்ளே செல்ல எனக்கு 6.55 மணி ஆயிற்று (வியாழக்கிழமை ஆகையால் குளிக்க இடம் தேடி சிறிது அலைந்தேன்) உள்ளே சென்று குரு சன்னதிக்கு 20 ரூபாய் வரிசையில் நின்றேன், அர்ச்சனை செய்து பிறகு அபத்ச்யகேஸ்வரர் மற்றும் உமையம்மையை தரிசித்து,காத்திருந்து உற்சவர் அபிஷேகம் (750 Rs. for abhisekam) முடிய மணி 9.30 ஆயிற்று.


ஒரு வழியாக ஆலங்குடியில் இருந்து மன்னார்குடிக்கு எனது பயணம் தொடர்ந்தது, தென்குடி திட்டையை  நோக்கி....


தென்குடி திட்டை- தஞ்சையில் இருந்து 9 km தொலைவில் உள்ளது இங்கே குரு பகவான் ராஜகுருவாக உள்ளார். உயர்ந்த புஷ்பராக கல் சாத்தி ராஜாவாக நின்ற கோலத்தில் உள்ளார், தொடர் பேருந்துகள் இல்லை என்றாலும் நேர மதிப்பை கருதி நான் ஆட்டோவில் சென்றேன் (300-250 ரூபாய் வரை கொடுக்கலாம்) ஏன் என்றால் நான் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு எனக்கு மணி 11.45 ஆயிற்று. (ஆலங்குடியில் இருந்து நீடாமங்கலம் இறங்கி தஞ்சை வந்து அடையாளம் ஆனால் உட்கார இடம் இருப்பது சிறிது கஷ்டம் ஆகையால் நான் மன்னார்குடி சென்று பின்னர் நான் தஞ்சை வந்து அடைந்தேன். நான் சற்றே அடித்து பேசி 200 ரூபாய்க்கு தென்குடி திட்டையை அடைந்தேன் மணி 12.02 ஓடி சென்று உள்ளே பார்த்தால் நடை திறந்து இருந்தது என்னே சிவனின் அருள் என்று வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்தேன் .

எனக்கு ஏன் என்று சொல்ல இயலவில்லை ஆனால் வசிஸ்டேஸ்வரர் மேல் ஒரு தனி ஈர்ப்பு உண்டு ஆகையால் உள்ளே சென்று வசிஸ்டேஸ்வரரை கண் குளிர தரிசித்து பின்னர் லோக மாத உலக நாயகியாக காட்சி தர அதையும் பெற்று சிறிது நேரம் இளைபார,  முதியவர் ஒருவர்  பதனீர் கொண்டு தந்தார் வெயிலுக்கு சுகமாக இருந்தது குடித்து முடித்து திரும்ப தஞ்சை பேருந்து வந்தது விரைந்தேன் தஞ்சைக்கு, திருச்சி செல்ல..... 

தஞ்சையில் இறங்கி மதிய உணவை முடித்து புதிய பேருந்து நிலையம் சென்று திருச்சிக்கு பயணம் ஆனேன் , எதற்கு திருச்சி என்று தோன்றுகிறதா திருபட்டூர் ப்ரஹ்மபுரீஸ்வரர் ஆலயம் நோக்கி, குரு பகவானின் ஆதி தேவதையாக இருக்கும் பிரம்மா இங்கே மஞ்சள் காப்போடு விற்றுயிருக்கிறார்.


திருச்சி சென்று அங்கிருந்து திருபட்டூர் செல்வது அவ்ளோ சாதாரணமாக இல்லை, திருச்சியில்(4.15 pm) இருந்து சத்திரம் பேருந்து நிலையம்  சென்று அங்கிருந்து வாட்டர் டேங்க் பின் புறம் சிறுகானூர் பேருந்து சென்று பிறகு சிறுகானூறில்(5.15 pm) இருந்து கோவிலுக்கு ஆட்டோ அல்லது மகிழுந்து (car or cab) மூலமாக சென்றடையலாம்.

அன்று கொஞ்சம் மழை சிறுகனூறில் இருந்து செல்ல வண்டி உள்ளது அனால் ஒருவருக்கு 100 ரூபாய் கேட்க சற்றே தயங்கி நின்று கொண்டிருந்தேன், அங்கே இரு நண்பர்கள் அதே கோவிலுக்கு என்னுடன் வாட்டர் டேங்க் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவர்கள் என்னோடு கோவிலுக்கு வந்தார்கள் நான் 35 ரூபாயும் அவர்கள் 65 ரூபாயும் சேர்த்து கோவிலை வந்து அடைந்தோம்(5.20 pm), சிவனை தரிசித்து பிரம்மாவையும் தரிசித்து உமையம்மையும் தரிசித்தேன். எண்ணே சிவனின் அருள் என்று நினைக்கையில் மலை சற்றே வேகம் புடித்தது சிவனை நினைத்து மழையில் நனைந்து கோவில் ப்ரதக்ஷினம் செய்தேன் என்னோடு வந்தவர்களை சிறிது நேரத்தில் காண இயலவில்லை நன் வெளியே வர மழை தூறல் இருந்தது. ஒரு வண்டி எனக்காகவே காத்திருந்த போல் என்னை ஏற்றி சிறுகனூரில் இறக்கி விட்டது (5.55 pm) ( (இந்த முறை ரூபாய் 20 மட்டுமே கொடுத்தேன்). 

சிறிது நேரத்தில் அங்கே பெரம்பலூர் பேருந்து வர அதில் ஏறி நான் பெரம்பலூர் வந்தடைந்தேன் மணி இப்பொழுது 6.45, பெரம்பலூர் டு சென்னை Push back சீட்டோடு கிடைக்க, அன்றைக்கு சிவன் என் சிந்தையுள் நின்று அவன் அருளாலே அவன் தாழ் வணங்கிய பேற்றை நினைத்து சென்னைக்கு பயணம் ஆனேன்.

மொத்தமாக என்னக்கு 2500-3000 ரூபாய்க்குள் இந்த பயணம் நிறைவடைந்தது.

திருச்சிற்றம்பலம் 

Comments

Popular Posts